Pages

Tuesday, December 23, 2008

படித்ததில் பிடித்தது: தழைக்குமா தமிழ்? - கவிவேந்தர் கா வேழவேந்தன்

"டாடி' என்றே அழைக்காதீர் இனிமை தோய தண்டமிழில் "அப்பா' வென்றழைத்திடுங்கள்! "மீடியா' என மொழிய வேண்டாம் நல்ல மென்தமிழில் "ஊடகங்கள்' எனக் கூறுங்கள் "பாடி' என்றே சொல்லாதீர் அழகாய் நந்தம் பழந்தமிழில் "உடலம்' என்றே கூறிடுங்கள்! "சூப்பர்' என்றே ஏன் பேச வேண்டும்? சொந்தச் சுவைத்தமிழில் "மிகநன்றே' என்றால் என்ன? "பேப்பர்' என்றே ஏன் மொழிய வேண்டும்? பேசும் பேச்சினிலே "தாள்' என்றால் தவறா? நாம் "சாஃப்ட்' என்றே ஏன் கூற வேண்டும்? தூய தாய்த் தமிழில் "மென்மை' என்றால் புரிந்திடாதா? "சேஃப்டியில்லை' எனப்புலம்பும் நீங்கள் நல்ல தேன்தமிழில் "காப்பில்லை' என்றால் தப்பா? "மம்மி' என்றே பெற்றவளைப் பிணமாக் காமால் மதுத்தமிழில் "அம்மா' வென்றழைத்தால் என்ன? "டம்மி' என்றே கூறுவதை மாற்றி, நந்தம் தண்டமிழில் "போலி' என்றே சொலக்கூடாதா? "செம்மொழி'யாய் நம்மொழியை அறிவித்தென்ன? சேய்த்தமிழர் தாய்த்தமிழை மிதித்து விட்டுத் தம்மொழியாய்த் "தேம்சுமொழி'யைத் தலையில் வைத்தால் சாகாமல் தீந்தமிழும் தழைப்ப தெங்கே?

படித்ததில் பிடித்தது: கொஞ்சம் பொறுமையா இருந்திருந்தா இதைவிட அருமையான மாடல் கிடைச்சிருக்குமே...!

ஒரு வகுப்பில் ஆசிரியை ஆண்பால், பெண்பால் இவற்றைப் பற்றி கற்பித்துக் கொண்டிருந்தாள்.. மனித இனத்துக்கு அப்பால் ஆங்கில மொழியில் எவை எவைக்கு பாலின பாகுபாடு கொடுக்கப்பட்டுள்ளது என்று தெளிவாக விளக்கிக் கொண்டிருந்தாள்.. (உங்க கலவரம் எனக்கு புரியுது மக்கா.. இதிலே அசைவமும் இல்லே... அந்தப் பய சின்னாவும் இல்லே.. நிம்மதியா தொடருங்கப்பு.. ) சூறாவளிகள், நீர் ஊர்திகள் இவற்றிற்கும் பெண்பாலிட்டு குறிப்பிடப்படுவது ஏன் என்று பாடம் சென்று கொண்டிருந்தபோது, ஒரு மாணவன் ஒரு சந்தேகத்தை எழுப்பினான்.. " கணினி " - ஆணா... பெண்ணா..?ஆசிரியைக்கு உண்மையிலேயே விடை தெரியவில்லை.. எனவே மாணவர்கள் தனியாகவும், மாணவிகள் தனியாகவும் கூடிப்பேசி இதற்கு முடிவு காணுமாறு அறிவுறுத்தினாள்..மாணவிகள் கணினி ஆண்பால்தான் என்ற முடிவுக்கு வந்தார்கள்... அதற்கு அவர்கள் சொன்ன காரணங்கள் இதோ...1) அதுக்கு எதையும் சுலபமா புரிய வைக்க முடியாது..2) உருவாக்கினவனைத் தவிர வேறே யாருக்கும் அதோட நடைமுறையை புரிஞ்சிக்க முடியாது..3) நாம ஏதாவது தப்பு பண்ணா மனசுலேயே வச்சிருந்து நேரம் பார்த்து மானத்தை வாங்கும்..4) எந்த நேரத்துல புகையும்... எந்த நேரத்துல மயங்கும்ன்னு சொல்லவே முடியாது..5) நம்ம கிட்ட இருக்கறதைவிட அடுத்தவங்க வச்சிருக்கறது நல்லா வேலை செய்யறது மாதிரி தோணும்...!
மாணவர்களோ கணிணி பெண்பால்தான்னு சாதிச்சாங்க.. அதுக்கு ஆதாரமா அவங்க சொன்னது இதோ...1) எப்பவுமே அடுத்த கணிணியோட ஒத்துப் போகவே போகாது..2) எட்ட இருந்து பார்க்க கவர்ச்சிகரமா இருக்கும்.. ஆனா கிட்டபோனாதான் அதோட வண்டவாளம் தெரியும்..3) நிறைய ஸ்டோர் பண்ணி வச்சிருக்கும்.. ஆனா எப்படி பயன்படுத்தணும்ன்னு அதுக்கு தெரியாது..4) பிரச்சினையை குறைக்கறத்துக்காக கண்டுபிடிக்கப்பட்டவை.. ஆனா பெரும்பாலான சமயங்கள்ல அதுகளேதான் பிரச்சினையே..5) அதை சொந்தமாக்கிக்கிட்ட பிறகுதான் நமக்கு புரியும்.. அடடா இன்னும் கொஞ்சம் பொறுமையா இருந்திருந்தா இதைவிட அருமையான மாடல் கிடைச்சிருக்குமேன்னு...!

Monday, July 14, 2008

பொங்குக‌ த‌மிழ்

ஊர் விட்டு
உறவை விட்டு
சொந்த நாட்டில்
வேற்று நாட்டினனைப்போல்...

இத்துன்ப‌ம் க‌லைந்து
நாம் கூடிக் கூத்த‌டும் நாள்
வெகு தொலைவில் இல்லை
என்று சொல்லி நீ பொங்கு!!!